அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்பொருளல்லது அவ்வூன் தினல்.
aruLalla tiyAteniR kollAmai kORalporuLalla tavvUn tinal
திருக்குறள் 254: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
அருள் எனப் படுவது கொல்லாமைச் செயல்!அருள் அற்றதாகும் உயிர்க் கோறல் செயல்!பொருள் அற்றதாகும் ஊன் தின்னும் செயல்!பொருந்துமோ அறத்திற்கு இத் தீய செயல்?
• அருள் யாது எனின் = அருள் நிறைந்த புண்ணியச் செயல் எதுவென்றால்• கொல்லாமை = ஓர் உயிரையும் தன் கையால் கொல்லாமல் இருத்தலாகும்;• அல்லது கோறல் = அருளற்ற கொடுஞ்செயல் எதுவென்றால் பிற உயிர்களைக் கொல்லுதலாகும்;• அவ்வூன் தினல் = அவ்வாறு கொல்லப்பட்ட உடலின் மாமிசத்தைத் தின்பது• பொருள் அல்லது = அறமல்லாத பெரும் பாவச் செயலாகும்.
மு.வரதராசன்
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
பரிமேலழகர்
அருள் யாது எனின் கொல்லாமை - அருள் யாது எனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம். (உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும் 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கிக், 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே
Meaning in English
'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill'; To eat dead flesh can never worthy end fulfil





