Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 253

அறத்துப்பால்துறவறவியல்26. புலான்மறுத்தல்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்உடல்சுவை உண்டார் மனம்.

paTaikoNTAr nenjsampOl nanRUkkA tonRanuTalsuvai yuNTAr manam

திருக்குறள் 253: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

கையில் ஆயுதம் ஏந்திய நெஞ்சம்இரக்கத்தை ஒருபோதும் நாடுவதில்லை!உயிரின் உடலைச் சுவைத்தவர் நெஞ்சம்கருணையை ஒருபோதும் நாடுவதில்லை!

• படை கொண்டார் நெஞ்சம் போல் = கையில் கொலைக்கருவியை ஏந்திய கொலையாளியின் மனம் இரக்கத்தை நினையாமல் கொலையையே நினைப்பது போல,• ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் = மற்றொரு பிராணியின் உடலைச் சுவைத்து உண்டவரின் மனமானது• நன்று ஊக்காது = நன்மை தரும் உயிர்க்கருணையை ஒருபோதும் எண்ணிப் பார்க்காது.

மு.வரதராசன்

ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

பரிமேலழகர்

படை கொண்டார் நெஞ்சம் போல் - கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல, ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - பிறி்தோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது. (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.)

சாலமன் பாப்பையா

கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.

Meaning in English

Like heart of them that murderous weapons bear, his mind, Who eats of savoury meat, no joy in good can find

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout