Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 252

அறத்துப்பால்துறவறவியல்26. புலான்மறுத்தல்

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

poruLATsi pORRAtArk killai aruLATsiAngkillai UnRin pavarkku

திருக்குறள் 252: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

பொருளைப் பேணத் தெரியாதவர்க்குபொருளால் எந்தப் பயனும் இல்லை!உயிரைக் கொன்று ஊன் தின்பவர்க்குஅருளால் எந்தப் பயனும் இல்லை!

• பொருள் ஆட்சி = பொருட்செல்வத்தால் வரும் நன்மைகளும் பயன்களும்• போற்றாதார்க்கு இல்லை = அப்பொருளைக் கவனமாகப் பாதுகாக்காதவர்களுக்குக் கிடைக்காது;• ஆங்கு = அதுபோலவே,• அருள் ஆட்சி = உயிர்க்கருணையால் விளையும் அருளாட்சியும் நன்மைகளும்• ஊன் தின்பவர்க்கு இல்லை = விலங்குகளின் இறைச்சியைத் தின்பவர்களுக்கு ஒருபோதும் கிட்டாது.

மு.வரதராசன்

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

பரிமேலழகர்

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை - பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை, ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை - அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை. (பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.

Meaning in English

No use of wealth have they who guard not their estate; No use of grace have they with flesh who hunger sate

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout