தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.
teruLAtAn meypporuL kaNTaRRAl tErinaruLAtAn seyyum aRam
Abishekappriyan
பொருள் / உரை
முருகா எளிய உரை
உள்ளத்தில் உயிர்க்கருணை இல்லாத ஒருவன் செய்யும் தான தர்மங்களை ஆராய்ந்து பார்த்தால், அது அறிவுத் தெளிவு இல்லாத ஒருவன் மெய்த்தத்துவ நூலின் உண்மைப் பொருளை உணர்ந்துவிட்டது போன்ற செயலாகும்.
• தேரின் = ஆழமாக ஆராய்ந்து பார்த்தால்,• அருளாதான் செய்யும் அறம் = உள்ளத்தில் கருணை இல்லாத கொடியவன் செய்யும் அறச்செயலானது,• தெருளாதான் = அறிவுத் தெளிவில்லாத பேதை ஒருவன்• மெய்ப்பொருள் கண்டற்றால் = மெய்ந்நூலின் உண்மைப் பொருளை உணர்ந்தது போன்ற செயலாகும்.
மு.வரதராசன்
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
பரிமேலழகர்
அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
Meaning in English
When souls unwise true wisdom's mystic vision see, The 'graceless' man may work true works of charity





