Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 247

அறத்துப்பால்துறவறவியல்25. அருளுடைமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குஇவ்வுலகம் இல்லாகி யாங்கு.

aruLillArk kavvulakam illai poruLillArkkivvulakam illAki yAngku

Ramamirdham Balasubramanian

பொருள் / உரை

முருகா எளிய உரை

பொருட்செல்வம் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்து வாழ்க்கை இன்பமாக அமையாது; அதுபோலவே, உயிர்கள் மீது இரக்கம் காட்டும் அருளுடைமை இல்லாதவர்களுக்கு வீட்டுலகப் பேரின்ப வாழ்க்கை ஒருபோதும் கிடைக்காது.

• பொருள் இல்லார்க்கு = பொருட்செல்வம் இல்லாத ஏழைகளுக்கு• இவ்வுலகம் இல்லாகியாங்கு = இவ்வுலகத்து வாழ்க்கை இன்பமாய் அமையாதது போல,• அருள் இல்லார்க்கு = எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்ளும் அருட்செல்வம் இல்லாதவர்களுக்கு• அவ்வுலகம் இல்லை = வீட்டுலகப் பேரின்ப வாழ்க்கை ஒருபோதும் கிட்டாது.

மு.வரதராசன்

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

பரிமேலழகர்

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.)

சாலமன் பாப்பையா

பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

Meaning in English

As to impoverished men this present world is not; The 'graceless' in you world have neither part nor lot

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout