Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 246

அறத்துப்பால்துறவறவியல்25. அருளுடைமை

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்.

poruLnIngkip possAntA renpar aruLnIngkiallavai seytozhuku vAr

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

உயிர்களிடத்தில் இரக்கம் காட்டாமல் கொடூரமான தீமைகளைச் செய்து வாழ்கின்றவர்கள், வாழ்க்கையின் உண்மைப் பொருளான தர்மத்தை இழந்து, அறியாமையால் தாம் அடைந்த துன்பங்களை மறந்து வாழ்பவர்கள் ஆவர்.

• அருள் நீங்கி = மற்ற உயிர்கள் மீதான கருணையை விட்டுவிட்டு• அல்லவை செய்து ஒழுகுவார் = தீய கொடுஞ்செயல்களைச் செய்து வாழ்பவர்களை,• பொருள் நீங்கி = வாழ்வின் உயர்ந்த மெய்ப்பொருளான அறநெறியை இழந்து• பொச்சாந்தார் என்பர் = தாம் அடைந்த துன்பங்களை மறந்த அறிவிலிகள் என்று சான்றோர்கள் கூறுவார்கள்.

மு.வரதராசன்

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

பரிமேலழகர்

அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

Meaning in English

Gain of true wealth oblivious they eschew, Who 'grace' forsake, and graceless actions do

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout