Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 245

அறத்துப்பால்துறவறவியல்25. அருளுடைமை

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லன்மா ஞாலங் கரி.

allal aruLALvArk killai vaLivazhangkumallanmA njAlang kari

Bellie Uncle

பொருள் / உரை

முருகா எளிய உரை

எல்லா உயிர்களிடத்தும் இரக்கமும் அருளும் கொண்டு வாழ்பவர்களுக்கு எந்தத் துன்பமும் நேர்வதில்லை; காற்று உலவும் வளம் நிறைந்த இந்த மாபெரும் உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்றாவர்.

• அருள் ஆள்வார்க்கு = எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டி வாழும் அருளாளர்களுக்கு• அல்லல் இல்லை = இவ்வுலகில் ஒருபோதும் துன்பம் ஏற்படுவதில்லை;• வளி வழங்கும் = காற்று வீசி இயங்குகின்ற• மல்லல் மா ஞாலம் = வளம் மிகுந்த இந்த மாபெரும் பூமியில் வாழும் மனிதர்களே• கரி = இதற்கு அழியாத சாட்சியாக விளங்குவர்.

மு.வரதராசன்

அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

பரிமேலழகர்

அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

Meaning in English

The teeming earth's vast realm, round which the wild winds blow, Is witness, men of 'grace' no woeful want shall know

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout