மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்பதன்னுயிர் அஞ்சும் வினை.
mannuyi rOmpi aruLALvAR killenpatannuyi ranjsum vinai
Parvathy Ramakrishnan
பொருள் / உரை
முருகா எளிய உரை
இவ்வுலகில் உள்ள பிற உயிர்களைத் தன் உயிர் போல் போற்றிப் பாதுகாத்து, அருளோடு வாழ்பவர்களுக்கு, தன் சொந்த உயிருக்குத் துன்பம் வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கக்கூடிய எந்தவொரு தீவினையும் ஒருபோதும் நேராது.
• மன் உயிர் ஓம்பி = உலகில் நிலைபெற்றுள்ள பிற உயிர்களைப் பாதுகாத்து• அருள் ஆள்வார்க்கு = அவற்றின் மீது இரக்கம் காட்டி வாழும் அருளாளர்களுக்கு,• தன் உயிர் அஞ்சும் = தன் சொந்த உயிருக்குத் துன்பம் வந்துவிடுமோ என்று அஞ்சத்தக்க• வினை = எந்தத் தீவினைகளும் (பாவங்களும்)• இல் என்ப = உண்டாவதில்லை என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
மு.வரதராசன்
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
பரிமேலழகர்
மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.)
சாலமன் பாப்பையா
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.
Meaning in English
Who for undying souls of men provides with gracious zeal, In his own soul the dreaded guilt of sin shall never feel





