Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 237

அறத்துப்பால்இல்லறவியல்24. புகழ்

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவது எவன்.

pukazhpaTa vAzhAtAr tannOvAr tammaiikazhvArai nOva tevan

Krisha Kishore

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஈகையும் நற்பண்புகளும் கொண்டு புகழ் பெருகும்படி வாழ முடியாதவர்கள், அதற்குக் காரணமான தங்களுடைய இயலாமையை எண்ணி நொந்துகொள்ள வேண்டுமே தவிர, தங்களை இகழ்ந்து பேசும் உலகத்தாரைக் குறை கூறி வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை.

• புகழ்பட வாழாதார் = தமக்கு நற்புகழ் உண்டாகும்படி வாழத் தெரியாத மனிதர்கள்,• தம் நோவார் = 'நம்மால் நன்மை செய்ய முடியவில்லையே' என்று தம்மையே நொந்து வருந்தாமல்,• தம்மை இகழ்வாரை = தங்களை இகழ்ந்து பேசும் உலகத்தாரை• நோவது எவன் = குறை கூறி வருந்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?

மு.வரதராசன்

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?

பரிமேலழகர்

புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.)

சாலமன் பாப்பையா

புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?

Meaning in English

If you your days will spend devoid of goodly fame, When men despise, why blame them? You've yourself to blame

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout