Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 236

அறத்துப்பால்இல்லறவியல்24. புகழ்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.

tOnRin pukazhOTu tOnRuka aஃtilArtOnRalin tOnRAmai nanRu

Shankar Mahadevan

பொருள் / உரை

முருகா எளிய உரை

மனிதனாகப் பிறப்பதானால் அல்லது ஒரு துறையில் களம் இறங்குவதானால் நல்ல புகழோடு சிறந்து விளங்க வேண்டும்; அத்தகைய புகழை ஈட்டும் உயர்ந்த குணம் இல்லாதவர்கள் இவ்வுலகில் தோன்றுவதை விடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

• தோன்றின் = மக்களாக இவ்வுலகில் பிறப்பதாகவோ அல்லது ஒரு துறையில் முன்னிற்பதாகவோ இருந்தால்• புகழொடு தோன்றுக = உலகத்தார் போற்றும் நற்புகழுடன் சிறந்து விளங்குக;• அஃது இலார் = அத்தகைய நற்புகழ் இல்லாதவர்கள்• தோன்றலின் = இவ்வுலகில் காட்சி தருவதை விட (வாழ்வதை விட)• தோன்றாமை நன்று = பிறக்காமலேயே (தோன்றாமலேயே) இருப்பது எவ்வளவோ மேலானது.

மு.வரதராசன்

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

பரிமேலழகர்

தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்)

சாலமன் பாப்பையா

பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

Meaning in English

If man you walk the stage, appear adorned with glory's grace; Save glorious you can shine, 'twere better hide your face

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout