ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன் றில்.
onRA ulakat tuyarnta pukazhallARponRAtu niRpaton Ril
Lavanya Sundararaman
பொருள் / உரை
முருகா எளிய உரை
தர்மத்தால் ஈட்டிய ஒப்பற்ற நற்புகழைத் தவிர காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கும் பொருள் இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை.
• ஒன்றா = தனக்கு இணையில்லாத ஒப்பற்றதாய்• உலகத்து உயர்ந்த = இவ்வுலகில் ஓங்கி நிற்கும்• புகழ் அல்லால் = நற்புகழைத் தவிர• பொன்றாது = காலத்தால் அழியாமல்• நிற்பது ஒன்று இல் = என்றென்றும் நிலைத்து நிற்கும் பொருள் வேறொன்றும் இல்லை.
மு.வரதராசன்
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர்
ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. (இணை இன்றாக ஓங்குதலாவது : கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா
தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.
Meaning in English
Save praise alone that soars on high, Nought lives on earth that shall not die





