உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றுஈவார்மேல் நிற்கும் புகழ்.
uraippA ruraippavai yellAm irappArkkonRIvArmEl niRkum pukazh
Srikanth Deva
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• உரைப்பார் = உலகத்தில் போற்றிப் பேசுவோர்• உரைப்பவை எல்லாம் = போற்றிப் புகழும் சொற்கள் அனைத்தும்,• இரப்பார்க்கு = வறுமையால் தன்னிடம் கையேந்தி வருபவர்களுக்கு• ஒன்று ஈவார் மேல் = வேண்டியதைக் கொடுத்து உதவும் வள்ளல்களின் மேல்• நிற்கும் புகழ் = நிலைத்து நிற்கும் புகழே ஆகும்.எளிய விளக்கம்:உலகப் புகழுரைகள் எல்லாம், வறியவர்க்கு இல்லை என்னாது கொடுத்து உதவும் வள்ளல்களின் மேல் நிலைத்து நிற்கும் அழியாத புகழையே குறிக்கும்.
மு.வரதராசன்
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
பரிமேலழகர்
உரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் - வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம். (புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே 'பாடுவார் பாடுவன எல்லாம் "புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம்சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.)"
சாலமன் பாப்பையா
சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.
Meaning in English
The speech of all that speak agrees to crown The men that give to those that ask, with fair renown





