சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈதல் இயையாக் கடை.
sAtalin innAta tillai initatUumIta liyaiyAk kaTai
Harsha Vardhan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனிதனுக்கு மரணத்தை விடத் துன்பமானது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை; ஆனால், தம்மிடம் கையேந்தி வரும் ஏழைகளுக்கு எதையும் கொடுத்து உதவ முடியாத கையறு நிலை ஏற்படும் போது, அத்தகைய மரணம்கூட மனிதனுக்கு இனியதாகிவிடும்.
• சாதலின் = மனிதனுக்கு மரணத்தை விட• இன்னாதது இல்லை = மிகுந்த துன்பமானது வேறொன்றும் இல்லை;• ஈதல் இயையாக் கடை = ஆனால் ஏழை எளியோருக்குக் கொடுத்து உதவ முடியாத கையறு நிலை ஏற்படும் போது• அதூஉம் இனிது = அந்த மரணம்கூட இனியதாகிவிடும் (பிறருக்கு உதவாத வாழ்வை விட மரணம் மேலானது).
மு.வரதராசன்
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
பரிமேலழகர்
சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
Meaning in English
'Tis bitter pain to die, 'Tis worse to live. For him who nothing finds to give





