Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 227

அறத்துப்பால்இல்லறவியல்23. ஈகை

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்தீப்பிணி தீண்டல் அரிது.

pAttUN marIi yavanaip pasiyennuntIppiNi tINTa laritu

Mithran

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• பாத்து ஊண் = தான் பெற்ற உணவைப் பிறருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணும் பழக்கத்தை• மரீஇயவனை = இயல்பாகப் பழகிய ஒரு மனிதனை,• பசி என்னும் = பசி என்று சொல்லப்படுகின்ற• தீப்பிணி = உடலையும் உள்ளத்தையும் வாட்டும் கொடிய நோய்• தீண்டல் அரிது = ஒருபோதும் வந்து தீண்டாது.எளிய விளக்கம்:தான் உண்ணும் உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் நற்பழக்கம் உடையவனை, 'பசி' என்னும் கொடிய நோய் ஒருபோதும் அணுகாது.

மு.வரதராசன்

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

பரிமேலழகர்

பாத்து ஊண் மரீஇயவனை - எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை. (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

Meaning in English

Whose soul delights with hungry men to share his meal, The hand of hunger's sickness sore shall never feel

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout