அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.
aRRAr azhipasi tIrttal aஃtoruvanpeRRAn poruLvaip puzhi
Kannan Narayanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஆதரவற்ற ஏழைகளின் கொடிய பசியைப் போக்க வேண்டும்; செல்வம் படைத்தவன் தன் பொருளை அழியாமல் பாதுகாத்து, தனக்குப் பயன்படும் வகையில் சேமித்து வைக்கும் மிகச் சிறந்த கருவூலம் ஏழைகளின் பசியைப் போக்குவதே ஆகும்.
• அற்றார் = ஒன்றுமில்லாத ஏழைகளின்• அழிபசி = உடலையும் உயிரையும் அழிக்கும் கொடிய பசியைத்• தீர்த்தல் = உணவிட்டுத் தீர்க்க வேண்டும்;• பொருள் பெற்றான் ஒருவன் = செல்வம் பெற்ற ஒரு மனிதன்• பொருள் வைப்புழி = தன் பொருளைப் பிற்காலப் பாதுகாப்புக்காகச் சேர்த்து வைக்கும் சிறந்த இடம்• அஃது = அந்த அறமேயாகும்.
மு.வரதராசன்
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
பரிமேலழகர்
அற்றார் அழிபசி தீர்த்தல் - வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது - பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான். (எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
Meaning in English
Let man relieve the wasting hunger men endure; For treasure gained thus finds he treasure-house secure





