துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
tuRantAr perumai tuNaikkURin vaiyattuiRantArai eNNikkoN TaRRu
Arunmozhi
பொருள் / உரை
முருகா எளிய உரை
துறவோர்தம் பெருமையை அளவிட்டால்!உலகில் பிறந்திறந் தோரை எண்ணிட்டால்!அது முடியாத ஒரு செயலாகும்!அளவிட முடியாப் பெருமை ஆகும்!
• துறந்தார் பெருமை = உலகப் பற்றுக்களைத் துறந்த மேன்மக்களின் பெருமையை• துணைக் கூறின் = 'இவ்வளவுதான்' என்று அளவிட்டுச் சொல்ல நினைத்தால்,• வையத்து = இவ்வுலகில் தோன்றிய காலம் முதல்• இறந்தாரை = பிறந்து இறந்துபோன மக்களின் எண்ணிக்கையை• எண்ணிக்கொண்டு அற்று = ஒருவர் விரல் விட்டு எண்ணி முடிப்பது போன்ற இயலாத செயலாகும்.
மு.வரதராசன்
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
பரிமேலழகர்
துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.)
சாலமன் பாப்பையா
ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.
Meaning in English
As counting those that from the earth have passed away, 'Tis vain attempt the might of holy men to say





