ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு.
ozhukkattu nIttAr perumai vizhuppattuvENTum panuval tuNivu
Sreekrishnan Swaminathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒழுக்கத்தில் தவறாமல் நின்றவர்கள்!முழுதாக ஆசைகளை விட்டவர்கள்!அவர்கள் பெருமையே எதையும் வெல்லும்!அனைத்து நூல்களுமே அதையே சொல்லும்!
• ஒழுக்கத்து = தமக்குரிய நல் ஒழுக்க நெறியில் வழுவாது நின்று• நீத்தார் பெருமை = உலகப் பற்றுக்களையும் ஆசைகளையும் துறந்த மேன்மக்களின் பெருமையை,• விழுப்பத்து வேண்டும் = சிறந்த பொருள்களில் எல்லாம் மிகச் சிறந்ததாக விரும்பிப் போற்றுவதே• பனுவல் துணிவு = மெய்ஞ்ஞான நூல்கள் அனைத்தின் ஒருமித்த அறுதியான முடிவாகும்.
Murugaa simple commentary
Those who stood without failing in conduct!Those who gave up desires completely!Their greatness alone conquers anything!All books say the very same!
• In conduct = Standing without deviating from one's own path of good conduct• Greatness of those who renounced = The greatness of noble people who renounced worldly attachments and desires,• Desiring as highest = Desiring and cherishing as the most excellent of all excellent things• Resolution of the texts = Is the unanimous conclusive determination of all scriptures of true wisdom.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
பரிமேலழகர்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.)
Parimelazhagar
Ozhukkaththu neeththaar perumai - the greatness of those who have renounced while standing firm in the conduct proper to them; vizhuppaththu vendum panuval thunivu - is the conclusion of treatises, which desire it as the most excellent among many excellent things. (Renouncing while standing firm in the conduct proper to them means: as one practises without swerving the conduct proper to one's respective class and stage of life, virtue grows; as virtue grows, sin wanes; as sin wanes, ignorance ceases; as ignorance ceases, the awareness of the distinction between the eternal and the non-eternal, aversion towards the pleasures of this world and the next which are by nature perishable, and the sufferings of birth appear; as they appear, desire for liberation arises; as that arises, all 'fruitless' efforts that are the cause of birth cease, and the effort of yoga that is the cause of liberation arises; as that arises, true knowledge is born, and external attachment, which is 'mine', and internal attachment, which is 'I', are abandoned. Therefore, understand this as abhorring and abandoning both these attachments in this very order. Because 'treatises' was stated in general, we obtain that this is the agreed conclusion for all religious treatises that do not agree with one another. The conclusion of the authors was attributed to the treatises.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.
Meaning in English
The settled rule of every code requires, as highest good, Their greatness who, renouncing all, true to their rule have stood

