நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.
nIrin RamaiyA tulakenin yAryArkkumvAnin RamaiyA tozhukku
திருக்குறள் 20: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
நீரே இல்லையென்றால் இந்த உலகமே இல்லை!யாராக இருந்தாலும் வாழவே வழியில்லை!மழையை இன்றி ஆறும் குளமும் நிரம்பாது!மழையை இன்றி ஒழுக்கநெறி நிரம்பாது!
• யார்யார்க்கும் = எத்தகைய உயர்நிலையில் உள்ள மனிதர்களுக்கும்• நீர் இன்று = நீர் இல்லாமல்• உலகு அமையாது எனின் = உலக வாழ்க்கை இயங்க முடியாது என்பது உண்மையானால்,• வான் இன்று = வானத்திலிருந்து பெய்யும் மழை இல்லாமல்• ஒழுக்கு அமையாது = அந்த நீரோ அல்லது உலக ஒழுக்க நெறியோ நிலைபெற்று இயங்க முடியாது.
Murugaa simple commentary
If there is no water, this world itself does not exist!Whoever one may be, there is no way to live at all!Without rain, rivers and ponds will not fill!Without rain, moral conduct will not be fulfilled!
• For anyone = Even for human beings in whatever high position• Without water = Without water• If the world cannot exist = If it is true that worldly life cannot function,• Without rain = Without the rain that falls from the sky• Conduct cannot exist = That water or the moral conduct of the world cannot endure and function.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
பரிமேலழகர்
யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை,'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)
Parimelazhagar
If for anyone the world cannot exist without water, that is, if the ways of the world cannot be established without water for people of any kind of excellence; the flowing cannot exist without the sky, that is, the unceasing flow of that water cannot exist without the sky. (He called wealth and pleasure 'the ways of the world', since they belong to this life, flowing unceasingly means being present at all times and in all places, and since it is clearly understood by everyone that the world cannot exist without water, to state that likewise it will be clearly understood that the flow cannot exist without the sky, he said, 'If the world cannot exist without water'. There are also some who explain this as, 'If the world cannot exist without water, good conduct will not be fulfilled without rain for people of any station'. By these three verses, its being the cause for the practice of virtue, wealth, and pleasure was stated.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது
Meaning in English
When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'
