Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 209

அறத்துப்பால்இல்லறவியல்21. தீவினையச்சம்

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.

tannaittAn kAtala nAyin enaittonRuntunnaRka tIvinaip pAl

Iraivan Irukiran

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவன் தன் சொந்த நலனையும் அமைதியையும் நேசிப்பவனானால், எவ்வளவு சிறிய அளவிலான தீய செயலாக இருந்தாலும் அதன் பக்கமே நெருங்காமல் விலகி வாழ வேண்டும்.

• தன்னைத் தான் காதலன் ஆயின் = ஒருவன் தன் நலனையும் உயிரையும் உண்மையாக விரும்புவானானால்,• தீவினைப் பால் = தீய செயல்களின் பக்கமாக• எனைத்து ஒன்றும் = எவ்வளவு சிறிய அளவிலான தீமையாயினும்• துன்னற்க = சிறிதும் நெருங்கிச் செய்யாமல் விலக வேண்டும்.

மு.வரதராசன்

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

பரிமேலழகர்

தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

Meaning in English

Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw near

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout