Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 210

அறத்துப்பால்இல்லறவியல்21. தீவினையச்சம்

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.

arungkETan enpa taRika marungkOTittIvinai seyyAn enin

Jovitta Priyanthy Sebastiampillai

பொருள் / உரை

முருகா எளிய உரை

நேர்மையான வழியை விட்டு விலகித் தவறான குறுக்கு வழியில் சென்று பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்கிறவன், தனக்கு எந்தவித அழிவும் இல்லாத அமைதியான பெருவாழ்வைப் பெறுவான்.

• மருங்கு ஓடி = நேர்வழியை விட்டுத் தவறான குறுக்கு வழியில் சென்று• தீவினை செய்யான் எனின் = பிறருக்குத் தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால்,• அருங்கேடன் என்பது = அவன் எந்தக் கேடும் இல்லாத பாதுகாப்பான நல்வாழ்வு உடையவன் என்பதை• அறிக = அறிந்துகொள்க.

மு.வரதராசன்

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

பரிமேலழகர்

மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

Meaning in English

The man, to devious way of sin that never turned aside, From ruin rests secure, whatever ills betide

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout