Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 207

அறத்துப்பால்இல்லறவியல்21. தீவினையச்சம்

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும்.

enaippakai yuRRArum uyvar vinaippakaivIyAtu pinsen RaTum

Malvika Rajagopal

பொருள் / உரை

முருகா எளிய உரை

எவ்வளவு கொடிய பகை உடையவரும் கூட ஏதேனும் ஒரு வழியில் தப்பித்துக் கொள்ள முடியும்; ஆனால் தான் செய்யும் தீய வினையாகிய பகையோ, ஒருவனை விட்டு நீங்காமல் தொடர்ந்து சென்று அழித்துவிடும்.

• எனைப் பகை உற்றாரும் = எவ்வளவு பெரிய பகைவர்களைக் கொண்டவரும்• உய்வர் = ஏதேனும் ஒரு வழியில் தப்பித்து வாழ்ந்துவிட முடியும்;• வினைப் பகை = ஆனால் தான் செய்த தீவினையாகிய பகையோ• வீயாது = ஒருபோதும் நீங்காமல்• பின் சென்று அடும் = பின்தொடர்ந்து சென்று அழித்துவிடும்.

மு.வரதராசன்

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

பரிமேலழகர்

எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)

சாலமன் பாப்பையா

எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

Meaning in English

From every enmity incurred there is to 'scape, a way; The wrath of evil deeds will dog men's steps, and slay

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout