Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 206

அறத்துப்பால்இல்லறவியல்21. தீவினையச்சம்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.

tIppAla tAnpiRarkaN seyyaRka nOyppAlatannai aTalvENTA tAn

Ajeesh Nathan

பொருள் / உரை

முருகா எளிய உரை

துன்பங்கள் தன்னை வந்து தாக்கி வருத்தக் கூடாது என்று நினைக்கிறவன், மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் எந்தச் செயலையும் தான் செய்யாமல் இருக்க வேண்டும்.

• நோய்ப்பால = துன்பம் விளைவிக்கும் கொடிய வினைகள்• தன்னை அடல் வேண்டாதான் = தன்னை வந்து வருத்தக் கூடாது என்று விரும்புகிறவன்,• தீப்பால = தீமை தரும் அச்செயல்களை• தான் பிறர்கண் செய்யற்க = தான் மற்றவருக்கு ஒருபோதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

மு.வரதராசன்

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

பரிமேலழகர்

நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)

சாலமன் பாப்பையா

துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

Meaning in English

What ranks as evil spare to do, if thou would'st shun Affliction sore through ill to thee by others done

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout