Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 204

அறத்துப்பால்இல்லறவியல்21. தீவினையச்சம்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

maRantum piRankETu sUzhaRka sUzhinaRanjsUzhunj sUzhntavan kETu

Sudha Ragunathan

பொருள் / உரை

முருகா எளிய உரை

மறந்துபோய் கூட பிறருக்கு அழிவை மனதால் நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தாலே போதும், நினைத்தவனுக்கு அழிவு வருமாறு தர்மக் கடவுளே வழி வகுத்துவிடும்.

• மறந்தும் = கவனக்குறைவாக அல்லது மறந்துபோயும் கூட• பிறன் கேடு = மற்றவருக்கு அழிவு தரும் கெடுதலை• சூழற்க = மனதால் கூட திட்டமிட்டு நினைக்கக் கூடாது• சூழின் = அப்படி ஒருவன் தீமை செய்ய நினைத்தால்• சூழ்ந்தவன் கேடு = அப்படி எண்ணியவனுடைய அழிவை• அறம் சூழும் = தர்மமே விரைந்து திட்டமிட்டு உண்டாக்கிவிடும்.

மு.வரதராசன்

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

பரிமேலழகர்

பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.)

சாலமன் பாப்பையா

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

Meaning in English

Though good thy soul forget, plot not thy neighbour's fall, Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout