தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.
tIyavai tIya payattalAl tIyavaitIyinum anjsap paTum
Keshav Ram
பொருள் / உரை
முருகா எளிய உரை
தீய செயல்கள் தனக்குத் தீமையையே விளைவிக்கும் என்பதால், தீய செயல்களைச் சுட்டெரிக்கும் நெருப்பை விடவும் கொடியதாகக் கருதி செய்ய அஞ்ச வேண்டும்.
• தீயவை = நாம் செய்யும் தீய செயல்கள்• தீய பயத்தலால் = முடிவில் கொடிய துன்பங்களையே விளைவிக்கும் என்பதால்,• தீயவை = அந்தத் தீவினைகளை• தீயினும் = சுட்டெரிக்கும் நெருப்பை விடவும் கொடியதாகக் கருதி• அஞ்சப்படும் = செய்ய அஞ்சி நடுங்கி விலக வேண்டும்.
மு.வரதராசன்
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
பரிமேலழகர்
தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)
சாலமன் பாப்பையா
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
Meaning in English
Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe





