தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.
tIvinaiyAr anjsAr vizhumiyAr anjsuvartIvinai yennunj seRukku
Sharmila
பொருள் / உரை
முருகா எளிய உரை
தீய செயல்களைச் செய்து பழகிய கொடியவர்கள் பாவம் செய்ய அஞ்ச மாட்டார்கள்; ஆனால் நற்குணமும் ஒழுக்கமும் நிறைந்த மேன்மக்கள் தீய செயல் செய்வதை நினைத்தாலே அஞ்சி நடுங்குவார்கள்.
• தீவினையார் = தீய செயல்களைச் செய்து பழகிய தீயவர்கள்,• தீவினை என்னும் செருக்கு = பாவச் செயல்களைச் செய்யும் அறியாமை மயக்கத்திற்கு• அஞ்சார் = சிறிதும் பயப்பட மாட்டார்கள்;• விழுமியார் = ஆனால் மேலான நற்குணம் கொண்ட சான்றோர்களோ• அஞ்சுவர் = அத்தீய செயலைச் செய்யப் பெரிதும் அஞ்சி நடுங்குவர்.
மு.வரதராசன்
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
பரிமேலழகர்
தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
Meaning in English
With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin





