Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 200

அறத்துப்பால்இல்லறவியல்20. பயனில சொல்லாமை

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்.

solluka solliR payanuTaiya sollaRkasolliR payanilAs sol

Surmukhi Raman

பொருள் / உரை

முருகா எளிய உரை

பேசினால் அறமும் நன்மையும் தருகின்ற பயனுள்ள நல்ல சொற்களை மட்டுமே பேச வேண்டும்; எந்த ஒரு நன்மையையும் தராத வீணான வெற்றுச் சொற்களை ஒருபோதும் பேசக் கூடாது.

• சொல்லில் = நாம் பேசும் சொற்களில்• பயன் உடைய சொல்லுக = அறமும் நன்மையும் தரும் பயனுள்ள சொற்களை மட்டுமே பேச வேண்டும்;• சொல்லில் = வீணான சொற்களில்• பயன் இலாச் சொல் = எவ்விதப் பயனும் தராத வெற்றுச் சொற்களை• சொல்லற்க = ஒருபோதும் பேசாமல் தவிர்த்துவிட வேண்டும்.

மு.வரதராசன்

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

பரிமேலழகர்

சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக, சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக. ('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது. "வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.)

சாலமன் பாப்பையா

சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.

Meaning in English

If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless word

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout