பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.
poruLtIrnta possAntunj sollAr maruLtIrntamAsaRu kATsi yavar
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• மருள் தீர்ந்த = அறியாமை மயக்கம் நீங்கிய• மாசு அறு காட்சியவர் = குற்றமற்ற தெளிந்த மெய்யறிவு உடைய சான்றோர்கள்,• பொச்சாந்தும் = மறதியினாலோ கவனக்குறைவினாலோ கூட,• பொருள் தீர்ந்த = நற்பயன் அற்ற வெற்றுச் சொற்களை• சொல்லார் = ஒருபோதும் பேச மாட்டார்கள்.எளிய விளக்கம்:அறியாமை மயக்கம் நீங்கித் தூய மெய்யறிவு பெற்ற சான்றோர்கள், மறதியினாலோ அல்லது கவனக்குறைவினாலோ கூட நற்பயன் தராத வீண் வார்த்தைகளை ஒருபோதும் பேச மாட்டார்கள்.
மு.வரதராசன்
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
பரிமேலழகர்
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது)"
சாலமன் பாப்பையா
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
Meaning in English
The men of vision pure, from wildering folly free, Not e'en in thoughtless hour, speak words of vanity





