அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்.
arumpaya nAyum aRivinAr sollArperumpaya nillAta sol
Ghibran
பொருள் / உரை
முருகா எளிய உரை
வாழ்வின் அரிய உண்மைகளையும் மேலான நன்மைகளையும் ஆராய்ந்து அறியும் கூரிய அறிவுடையவர்கள், மனித வாழ்க்கைக்குப் பெரிய பலனைத் தராத எந்த ஒரு பயனற்ற சொல்லையும் ஒருபோதும் பேச மாட்டார்கள்.
• அரும்பயன் = அறிவதற்கு அரிய மேலான நற்பயன்களை• ஆயும் = ஆராய்கின்ற• அறிவினார் = பேரறிவு படைத்த சான்றோர்கள்,• பெரும்பயன் இல்லாத சொல் = மனித வாழ்க்கைக்குப் பெரும் நன்மை தராத எந்த ஒரு சொல்லையும்• சொல்லார் = ஒருபோதும் பேச மாட்டார்கள்.
மு.வரதராசன்
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
பரிமேலழகர்
அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.)
சாலமன் பாப்பையா
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
Meaning in English
The wise who weigh the worth of every utterance, Speak none but words of deep significance





