Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 2

அறத்துப்பால்பாயிரவியல்1. கடவுள் வாழ்த்து

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.

kaRRatanAl Aya payanenkol vAlaRivannaRRAL tozhAar enin

திருக்குறள் 2: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

மெய்யறிவு இறைவனைத் தொழாமல்!அவன் திருவடியை வணங்காமல்!கற்றதனால் ஆன பயன்தான் என்ன?எல்லா நூலும் கற்றும் பயன்தான் என்ன?

• வால் அறிவன் = தூய மெய்யறிவின் வடிவாக விளங்கும் இறைவனுடைய• நல் தாள் = நன்மைகள் அருளும் திருவடிகளை• தொழாஅர் எனின் = மனதார வணங்கிப் பணியாமல் இருப்பார்களானால்,• கற்றதனால் ஆய பயன் என்கொல் = அவர்கள் பல நூல்களைக் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன? (ஒரு பயனும் இல்லை).

மு.வரதராசன்

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

பரிமேலழகர்

கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

Meaning in English

No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's' feet adore

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout