Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 195

அறத்துப்பால்இல்லறவியல்20. பயனில சொல்லாமை

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்.

sIrmai siRappoTu nIngkum payanilanIrmai yuTaiyAr solin

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

நற்பண்புகளும் தகுதியும் உடைய பெரியவர்கள் கூடப் பயனில்லாத வெற்றுச் சொற்களைப் பேசுவார்களேயானால், அவர்களுடைய உயர்ந்த பெருமையும் புகழும் உடனே அவர்களை விட்டு மறைந்துவிடும்.

• நீர்மையுடையார் = நற்குணங்களும் பெருந்தன்மையும் கொண்ட சான்றோர்• பயனில சொலின் = பயனற்ற வெற்றுச் சொற்களைப் பேசுவாரானால்,• சீர்மை = அவரது உயர்ந்த பெருமையும்• சிறப்பொடு = அதனால் உண்டான மதிப்பும் மரியாதையும்• நீங்கும் = உடனே அவரை விட்டு அகன்றுவிடும்.

மு.வரதராசன்

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

பரிமேலழகர்

பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.)

சாலமன் பாப்பையா

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

Meaning in English

Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout