நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து.
nayansArA nanmaiyin nIkkum payansArAppaNpilsol pallA rakattu
SuccessKarthick
பொருள் / உரை
முருகா எளிய உரை
பயனற்றதும் நற்பண்பில்லாததுமான சொற்களைப் பலர் கூடியுள்ள அவையில் ஒருவன் பேசுவானானால், அச்சொற்கள் நீதியோடு சேராமல் அவனை நற்குணங்களிலிருந்தும் நன்மைகளிலிருந்தும் முற்றிலுமாகப் பிரித்துவிடும்.
• பயன்சாரா = நற்பயனோடு சேராத• பண்பில் சொல் = நற்குணமற்ற அற்பச் சொற்களை• பல்லார் அகத்து = பலர் கூடியுள்ள இடத்தில் ஒருவன் பேசினால்,• நயன் சாரா = அவை நீதியோடு பொருந்தாமல் போய்• நன்மையின் நீக்கும் = அவனை நற்குணங்கள் மற்றும் நன்மைகளிலிருந்து விலக்கிவிடும்.
மு.வரதராசன்
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
பரிமேலழகர்
பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.)
சாலமன் பாப்பையா
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
Meaning in English
Unmeaning, worthless words, said to the multitude, To none delight afford, and sever men from good





