பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலிற் றீது.
payanila pallArmun sollal nayanilanaTTArkaT seytaliR RItu
Ajeesh Sivakumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• பயனில = பயனற்ற வெற்றுச் சொற்களை• பல்லார்முன் சொல்லல் = அறிவுடைய சான்றோர் பலர் முன் பேசுவது,• நயனில = விரும்பத்தகாத தீய செயல்களை• நட்டார்கண் செய்தலின் = தன் நண்பர்களுக்குச் செய்வதை விடவும்• தீது = மிகக் கொடிய தீமையாகும்.எளிய விளக்கம்:அறிவுடைய சான்றோர்கள் பலர் கூடியுள்ள அவையில் பயனில்லாத வீண்வார்த்தைகளைப் பேசுவது, தன் உயிர்த் தோழர்களுக்குத் துரோகமும் தீமையும் செய்வதை விடவும் மிகக் கொடிய குற்றமாகும்.
மு.வரதராசன்
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
பரிமேலழகர்
பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
Meaning in English
Words without sense, where many wise men hear, to pour Than deeds to friends ungracious done offendeth more





