பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.
pallAr muniyap payanila solluvAnellArum eLLap paTum
S. Sahana
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறிவுடைய சான்றோர்கள் பலரும் கேட்டு வெறுக்கும்படியாகப் பயனற்ற வெற்றுச் சொற்களைப் பேசிக்கொண்டிருப்பவனை, உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் இகழ்ந்து ஒதுக்கிவிடுவார்கள்.
• பல்லார் முனிய = அறிவுடையோர் பலரும் கேட்டு வெறுக்கும்படி• பயனில சொல்லுவான் = அர்த்தமற்ற வெற்றுச் சொற்களைப் பேசுபவன்,• எல்லாரும் = எல்லாராலும்• எள்ளப்படும் = இகழ்ந்து ஒதுக்கப்படுவான்.
மு.வரதராசன்
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
பரிமேலழகர்
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.)
சாலமன் பாப்பையா
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
Meaning in English
Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise





