ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
EtilAr kuRRampOl tangkuRRang kANkiRpintItuNTO mannu muyirkku
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
அடுத்தவரின் குறைகளைத் துருவித் துருவிப் பார்ப்பது போல, தமக்குள் இருக்கும் குறைகளையும் நேர்மையோடு ஒருவன் கண்டறிந்து திருத்திக்கொண்டால், அவனது வாழ்க்கையில் எந்தத் தீங்கும் துன்பமும் நேராது.
• ஏதிலார் குற்றம் போல் = அயலாரின் குற்றங்குறைகளைக் காண்பது போல• தங்குற்றங் காண்கிற்பின் = தமக்குள் இருக்கும் சொந்தக் குறைகளையும் காண வல்லவரானால்,• மன்னும் உயிர்க்கு = நிலைபெற்று வாழும் மனித உயிருக்கு• தீது உண்டோ = ஏதேனும் துன்பம் அல்லது தீங்கு உண்டாகுமோ? (உண்டாகாது).
மு.வரதராசன்
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
பரிமேலழகர்
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது
சாலமன் பாப்பையா
புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?
Meaning in English
If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living man





