Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 188

அறத்துப்பால்இல்லறவியல்19. புறங்கூறாமை

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.

tunniyAr kuRRamun tURRum marapinarennaikol EtilAr mATTu

Latha Shanthalakshmi

பொருள் / உரை

முருகா எளிய உரை

தம்மோடு மிக நெருங்கிப் பழகிய உற்ற நண்பர்களின் குறைகளையே அவர்கள் இல்லாதபோது புறம்பேசித் தூற்றும் கேவலமான குணம் கொண்டவர்கள், தமக்கு அறிமுகமில்லாத அயலாரைப் பற்றி என்னென்ன கொடுமையான அவதூறுகளைத்தான் பேசமாட்டார்கள்!

• துன்னியார் = தம்முடன் நெருங்கிப் பழகியவரின்• குற்றமும் = குற்றங்களையும்• தூற்றும் மரபினார் = புறம்பேசித் தூற்றும் சுபாவம் உள்ளவர்கள்,• ஏதிலார் மாட்டு = தமக்கு அறிமுகமில்லாத அயலாரிடத்தில்• என்னைகொல் = என்ன கொடுமையைத்தான் செய்யமாட்டார்கள்?

மு.வரதராசன்

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

பரிமேலழகர்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

Meaning in English

Whose nature bids them faults of closest friends proclaim What mercy will they show to other men's good name

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout