பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.
piRanpazhi kURuvAn tanpazhi yuLLuntiRanterintu kURap paTum
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
அடுத்தவர் இல்லாதபோது அவரது குறைகளைப் புறம்பேசுகின்ற ஒருவனுடைய சொந்தக் குற்றங்களிலேயே மிகக் கொடுமையானவற்றைத் தேடி எடுத்து, உலகம் ஊரறிய அவனைக் கேவலமாகப் பழித்துப் பேசும்.
• பிறன்பழி கூறுவான் = பிறர் இல்லாதபோது அவரது குறைகளைப் புறம்பேசுபவன்,• தன்பழி யுள்ளும் = தன் சொந்தக் குற்றப் பழிகளிலேயே• திறன்தெரிந்து = மிகவும் நோகத்தக்கவற்றைத் தேடி எடுத்து• கூறப்படும் = பிறரால் ஊரறியப் பழித்து உரைக்கப்படுவான்.
மு.வரதராசன்
மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
பரிமேலழகர்
பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும். ('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.)
சாலமன் பாப்பையா
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.
Meaning in English
Who on his neighbours' sins delights to dwell, The story of his sins, culled out with care, the world will tell





