அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.
aRanjsollum nenjsattAn anmai puRanjsollumpunmaiyAR kANap paTum
பவதாரணி குணசேகரன் - Bavatharani Gunasekaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவன் வாயளவில் எவ்வளவுதான் அறநெறிகளைப் பேசினாலும், அவன் உண்மையில் உள்ளத்தால் அறம் இல்லாத போலி என்பது, அவன் பிறரைப் பற்றிப் பின்னால் புறம்பேசும் இழிசெயலைக் கொண்டே தெரிந்துவிடும்.
• அறஞ்சொல்லும் = நாவால் அறத்தைப் பேசினாலும்• நெஞ்சத்தான் அன்மை = உள்ளத்தில் அறம் இல்லாதவன் என்பது,• புறஞ்சொல்லும் = (அவன் அடுத்தவரைப் பற்றிப்) புறம்பேசும்• புன்மையால் = இழிவான சிறுமையைக் கொண்டே• காணப்படும் = உலகத்தாரால் அறியப்படும்.
மு.வரதராசன்
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
பரிமேலழகர்
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.)
சாலமன் பாப்பையா
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
Meaning in English
The slanderous meanness that an absent friend defames, 'This man in words owns virtue, not in heart,' proclaims





