கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்கமுன்னின்று பின்நோக்காச் சொல்.
kaNNinRu kaNNaRas sollinunj sollaRkamunninRu pinnOkkAs sol
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவரது முகத்திற்கு எதிரே நின்று எவ்விதத் தாட்சணியமும் பார்க்காமல் கடுமையாகக் குறை கூறினாலும் கூறலாம்; ஆனால் அவர் நேரில் இல்லாத போது, பின்விளைவுகளை யோசிக்காமல் பின்னால் புறம்பேசக் கூடாது.
• கண்ணின்று = ஒருவரது நேரில் நின்று• கண்ணறச் சொல்லினும் = முகதாட்சணியம் பாராமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம்;• முன்னின்று = அவர் எதிரில் இல்லாத போது• பின்நோக்காச் சொல் = பின்விளைவுகளை எண்ணாத புறம்பேச்சை• சொல்லற்க = ஒருபோதும் சொல்லக் கூடாது.
மு.வரதராசன்
எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
பரிமேலழகர்
கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.
Meaning in English
In presence though unkindly words you speak, say not In absence words whose ill result exceeds your thought





