புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
puRangkURip poyttuyir vAzhtaliR sAtalaRangkURum Akkan tarum
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• புறங்கூறி = ஒருவர் இல்லாதபோது புறம்பேசி,• பொய்த்து = நேரில் வரும்போது பொய்யாக நடித்து• உயிர் வாழ்தலின் = உயிர் வாழ்வதை விட,• சாதல் = (அவ்வாறு செய்யாமல்) இறந்து போவதே• அறங்கூறும் ஆக்கம் தரும் = அறநூல்கள் கூறும் உயர்ந்த நன்மைகளைத் தரும்.எளிய விளக்கம்:ஒருவர் இல்லாதபோது அவரைப் புறம்பேசிவிட்டு, நேரில் காணும்போது பொய்யாகப் பழகி உயிர் வாழ்வதை விட, அத்தகைய இழிவைச் செய்யாமல் இறந்து போவதே அறநூல்கள் போற்றும் மேலான ஆன்ம உயர்வைத் தரும்.
மு.வரதராசன்
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
பரிமேலழகர்
புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.)
சாலமன் பாப்பையா
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
Meaning in English
'Tis greater gain of virtuous good for man to die, Than live to slander absent friend, and falsely praise when nigh





