Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 181

அறத்துப்பால்இல்லறவியல்19. புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது.

aRangkURA nalla seyinum oruvanpuRangkURA nenRal initu

Latha Shanthalakshmi

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவன் அறநெறிகளைப் போற்றிப் பேசாதவனாய் பல தவறுகளையே செய்து வந்தாலும் கூட, 'அவன் அடுத்தவரைப் பற்றிப் பின்னால் புறம்பேச மாட்டான்' என்ற ஒரு நற்பெயர் அவனுக்கு இருப்பது மிகவும் நல்லதாகும்.

• ஒருவன் = ஒரு மனிதன்• அறங்கூறான் = அறநெறிகளைப் பேசாதவனாய்• அல்ல செயினும் = தவறான பாவச் செயல்களைச் செய்தாலும்,• புறங்கூறான் என்றல் = 'அவன் அடுத்தவரைப் பற்றிப் புறம்பேச மாட்டான்' என்று சொல்லப்படுவது• இனிது = அவனுக்கு மிகப்பெரிய நன்மையைத் தரும்.

மு.வரதராசன்

ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

பரிமேலழகர்

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்;புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது

Meaning in English

Though virtuous words his lips speak not, and all his deeds are ill If neighbour he defame not, there's good within him still

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout