Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 180

அறத்துப்பால்இல்லறவியல்18. வெஃகாமை

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னுஞ் செருக்கு.

iRalInum eNNAtu veஃkin viRalInumvENTAmai yennunj serukku

Latha Shanthalakshmi

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• எண்ணாது வெஃகின் = பின்விளைவை எண்ணாமல் (பிறர் பொருளை) விரும்பினால்• இறல் ஈனும் = அது பேரழிவைத் தரும்;• வேண்டாமை என்னும் = (பிறர் பொருளை) விரும்பாத• செருக்கு = மன உறுதி என்னும் பெருஞ்செல்வம்• விறல் ஈனும் = நிலையான வெற்றியைத் தரும்.எளிய விளக்கம்:பின்விளைவுகளை யோசிக்காமல் பிறர் பொருளைக் கவர ஆசைப்பட்டால் அது அழிவைத் தரும்; பிறர் பொருளை விரும்பாத மன நிறைவும் உறுதியும் ஒருவனுக்கு என்றும் நிலையான பெருவெற்றியைத் தரும்.

மு.வரதராசன்

வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

பரிமேலழகர்

எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.]

சாலமன் பாப்பையா

பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.

Meaning in English

From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout