Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 179

அறத்துப்பால்இல்லறவியல்18. வெஃகாமை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறன்அறிந் தாங்கே திரு.

aRanaRintu veஃkA aRivuTaiyArs sEruntiRanaRin tAngkE tiru

Latha Shanthalakshmi

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறநெறி இதுவென்று அறிந்து, பிறர் பொருளைக் கவர ஆசைப்படாத மெய்யறிவு கொண்ட சான்றோர்களை, செல்வத் திருமகள் தானே வழியறிந்து தேடிச் சென்று அவரிடம் நிலைத்து வாழ்வாள்.

• அறனறிந்து = அறத்தின் வழியை உணர்ந்து• வெஃகா = பிறர் பொருளை விரும்பாத• அறிவுடையார் = அறிவுடைய சான்றோர்களை,• திரு = செல்வத் திருமகள்• திறனறிந்து = சேரும் வழியறிந்து• ஆங்கே சேரும் = தானே தேடிச் சென்று அடைவாள்.

மு.வரதராசன்

அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

பரிமேலழகர்

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.

Meaning in English

Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout