சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
siRappoTu pUsanai sellAtu vAnamvaRakkumEl vAnOrkkum INTu
திருக்குறள் 18: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• வானம் வறக்குமேல் = வானத்திலிருந்து மழை பெய்யாமல் உலகம் வறண்டு போனால்,• ஈண்டு = இவ்வுலகத்தில்• வானோர்க்கும் = இறைவனுக்கும் வானுலகத் தேவர்களுக்கும் கூட,• சிறப்பொடு = ஆண்டுதோறும் எடுக்கப்படும் பெரும் திருவிழாக்களும்,• பூசனை = நாள்தோறும் செய்யப்படும் நித்திய வழிபாடுகளும்• செல்லாது = நடைபெறாமல் நின்றுபோகும்.எளிய விளக்கம்:மழையே பெய்யாமல் வானம் வறளும்!ஆண்டுதோறும் வரும் திருவிழாவும்!நாள்தோறும் நடக்கும் பூசனைகளும்!தேவர்க்கும் இங்கே நடவாது போகும்!
மு.வரதராசன்
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
பரிமேலழகர்
வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)
சாலமன் பாப்பையா
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது
Meaning in English
If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore





