Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 17

அறத்துப்பால்பாயிரவியல்2. வான்சிறப்பு

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.

neTungkaTalum tannIrmai kunRum taTintezhilitAnnalkA tAki viTin

திருக்குறள் 17: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

கடலை உறிஞ்சி மேகம் கொடுக்காமல்!படர்ந்து மழையாய்த் திரும்பத் தராமல்!நெடிய கடலும் தன் வளம் இழக்கும்!வடிந்து வறண்டு வெறுமையாய்ப் போகும்!

• எழிலி = மேகமானது கடலிலிருந்து நீரை முகந்து சென்று• தான் தடிந்து = மின்னி இடித்து மழையாகப் பொழிந்து• நல்காது ஆகிவிடின் = மீண்டும் கடலுக்குத் தராமல் போகுமானால்,• நெடுங்கடலும் = எல்லையற்ற பெரிய கடலும் கூட• தன் நீர்மை குன்றும் = தன் இயல்பான நீர்வளத்தையும், முத்து பவளம் போன்ற செல்வ வளங்களையும் இழந்து வற்றிவிடும்.

மு.வரதராசன்

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்

பரிமேலழகர்

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் - மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின். (உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து"(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா

பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்

Meaning in English

If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean's wide domain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout