விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.
visumpin tuLivIzhin allAlmaR RAngkEpasumpul talaikAN paritu
திருக்குறள் 16: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
மேகத்தில் இருந்து துளியே விழாமல்!பகலும் இரவும் மழையே இல்லாமல்!பசும்புல் நுனியைப் பார்ப்பதும் அரிது!பசுமை எங்கும் தெரிவதும் அரிது!
• விசும்பின் துளி = வானத்து மேகத்திலிருந்து மழைத்துளிகள்• வீழின் அல்லால் = மண்ணில் விழுந்தால் மட்டுமே ஒழிய,• மற்று ஆங்கே = மழை விழாதபோது• பசும்புல் = மிகச் சிறிய ஓரறிவு உயிராகிய பசும்புல்லின்• தலை காண்பு அரிது = நுனியைக் கூடப் பூமியில் பார்ப்பது அரிதாகும் (ஒரு புல்லும் முளைக்காது).
மு.வரதராசன்
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
பரிமேலழகர்
விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.)
சாலமன் பாப்பையா
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்
Meaning in English
If from the clouds no drops of rain are shed 'Tis rare to see green herb lift up its head





