Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 15

அறத்துப்பால்பாயிரவியல்2. வான்சிறப்பு

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.

keTuppatUum keTTArkkus sArvAymaR RAngkEeTuppatUum ellAm mazhai

திருக்குறள் 15: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

பெய்யாமல் நின்று வாழ்வையே கெடுக்கும்!பெய்திடும் போது வீழ்ந்தவரைத் தூக்கும்!நொந்தவர்க்குத் துணையாகும் மழையே!மீட்டு எடுப்பதும் எல்லாம் மழையே!

• கெடுப்பதூஉம் = உரிய காலத்தில் பெய்யாமல் மக்களைக் கெடுத்து வறுமையில் ஆழ்த்த வல்லதும்,• கெட்டார்க்கு = அவ்வாறு மழையின்றி வறுமையில் கெட்டு நொந்தவர்களுக்கு• சார்வாய் = புகலிடமாகவும் துணையாகவும் நின்று• மற்று ஆங்கே = அதேபோல் தக்க காலத்தில் பெய்து• எடுப்பதூஉம் = அவர்களை வளப்படுத்தி மீண்டும் வாழ வைக்க வல்லதும்• எல்லாம் மழை = ஆகிய அனைத்து பேராற்றல்களும் மழையினுடையதே ஆகும்.

மு.வரதராசன்

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

பரிமேலழகர்

கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை - இவை எல்லாம் வல்லது மழை. ('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

Meaning in English

'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout