Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 14

அறத்துப்பால்பாயிரவியல்2. வான்சிறப்பு

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.

Erin uzhAar uzhavar puyalennumvAri vaLangkunRik kAl

திருக்குறள் 14: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

மழையின் வருவாய் குறைந்து போனால்!மழைத்துளி ஒன்றும் விழாது போனால்!உழவர்கள் ஏரினைப் பூட்ட மாட்டார்!உழவுத் தொழிலை நடத்த மாட்டார்!

• புயல் என்னும் வாரி = மழை என்னும் இயற்கை வருவாய்• வளம் குன்றியக்கால் = தன் அளவில் குறைந்து பொய்த்துப்போனால்,• உழவர் = உலகிற்கே உணவளிக்கும் உழவர்களும்• ஏரின் உழாஅர் = நிலத்தில் ஏர் பூட்டி உழவுத் தொழில் செய்ய மாட்டார்கள்.

மு.வரதராசன்

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

பரிமேலழகர்

உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்

Meaning in English

If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout