Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 13

அறத்துப்பால்பாயிரவியல்2. வான்சிறப்பு

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.

viNinRu poyppin virinIr viyanulakattuuLnin RuTaRRum pasi

திருக்குறள் 13: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

கருமேகம் பொய்த்து மழை தராவிட்டால்!பருவம் தவறி மழையும் போய்விட்டால்!கடல்நீரால் சூழ்ந்த உலகையும் வாட்டும்!உடலுக்குள் இருந்து பசியே வாட்டும்!

• விண் இன்று பொய்ப்பின் = வானத்திலிருந்து மழை உரிய காலத்தில் பெய்யாமல் பொய்த்துப்போனால்,• விரிநீர் வியன் உலகத்து = கடல் நீரால் சூழப்பட்ட இந்த அகன்ற பெரிய உலகத்திலும்கூட,• உள்நின்று = அனைத்து உயிர்களின் உடலுக்குள்ளும் நிலைபெற்று நின்று• உடற்றும் பசி = கொடிய பசியானது உயிர்களை வாட்டி வதைக்கும்.

மு.வரதராசன்

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்

பரிமேலழகர்

விண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் - கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி - நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்

Meaning in English

If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout