Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 12

அறத்துப்பால்பாயிரவியல்2. வான்சிறப்பு

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.

tuppArkkut tuppAya tuppAkkit tuppArkkuttuppAya tUu mazhai

திருக்குறள் 12: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

உண்பவர்க்கு நல்லுணவை விளைத்துத் தருமே!உண்ணுவார்க்குத் தானுமொரு உணவாய் வருமே!பசியினைப் போக்குகிற உணவும் மழைதான்!பருகிடும் தாகம் தீர்க்கும் நீருமே மழைதான்!

• துப்பார்க்கு = உணவை உண்பவர்களுக்கு• துப்பு ஆய துப்பு ஆக்கி = நல்ல உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு மட்டுமல்லாமல்,• துப்பார்க்கு = அந்த உணவை உண்கின்றவர்களுக்கே• துப்பு ஆயதூஉம் = பருகும் நீராகத் தானும் உணவாக மாறி உதவி நிற்பதும்• மழை = வானத்திலிருந்து பொழியும் மழையே ஆகும்.

மு.வரதராசன்

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

பரிமேலழகர்

துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் 16 நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே

Meaning in English

The rain makes pleasant food for eaters rise; As food itself, thirst-quenching draught supplies

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout