Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 11

அறத்துப்பால்பாயிரவியல்2. வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

vAnin Rulakam vazhangki varutalAltAnamizhtam enRuNaraR pARRu

S. P. Charan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• வான் நின்று = வானத்திலிருந்து மழை தவறாமல் பொழிந்து• உலகம் வழங்கி வருதலால் = உலகத்து உயிர்களைக் காத்து வாழ வைத்து வருவதால்,• தான் = அந்த மழையே• அமிழ்தம் என்று உணரற்பாற்று = உலகத்து உயிர்களுக்கு வாழ்வளிக்கும் சாகா அமிழ்தம் என்று போற்றத்தக்கதாகும்.எளிய விளக்கம்:வானத்திலிருந்து பெய்யும் மழையே உலகத்து உயிர்களைக் காப்பாற்றி வாழ வைக்கிறது; எனவே, அந்த மழையே இவ்வுலக உயிர்களுக்குக் கிடைத்த சாகாவரம் தரும் அமிழ்தமாகும்.

மு.வரதராசன்

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

பரிமேலழகர்

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின,உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.)

சாலமன் பாப்பையா

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

Meaning in English

The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout